உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் மனு

 ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் மனு

தேனி:கலெக்டர் அலுவலகத்தில் வடத்தான்குளம் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் சங்க நிறுவனர் முருகன் தலைமையில் நிர்வாகிகள் வடமலைமுத்து, கண்ணன், பொன்ராம் மனு அளித்தனர். விவசாயிகள் கூறியதாவது: போடி தாலுகா சிலமலையில் வடத்தான்குளம் அமைந்தள்ளது. இந்த குளத்தின் மூலம் நேரடி, மறைமுகமாக சுமார் ஆயிரம் விவசாயிகள் பயனடைகிறோம். அந்த குளத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வரும் நீரோடை வழியாக தண்ணீர் வரும். கடந்த சில ஆண்டுகளாக நீர் வரத்து ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை. நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும் கோரி உள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை