உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டியில் மழை இல்லாததால் விதைப்புக்கு விவசாயிகள் தயக்கம்

ஆண்டிபட்டியில் மழை இல்லாததால் விதைப்புக்கு விவசாயிகள் தயக்கம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் மழை பொய்த்து வருவதால் மானாவாரி நிலங்களில் விதைப்புக்கு விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். ஆண்டிபட்டி தாலுகாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையை பயன்படுத்தி ஆடியில் துவங்கி புரட்டாசி வரை விதைப்பு பணிகள் மேற்கொள்வர். மானாவாரியாக இப்பகுதியில் அதிக அளவில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகிவை விதைப்பு செய்யப்படும். கோடை வெயிலுக்குப் பின் விவசாயிகள் நிலங்களில் உழவு செய்து உரமிட்டு விதைப்புக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆனால் கடந்த இரண்டு மாதமாக ஆண்டிபட்டி பகுதியில் விதைப்புக்கான மழை பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழை முடிந்தபின் வடகிழக்கு பருவமழையாவது கை கொடுக்கும் என்று நம்பி இருந்த விவசாயிகளுக்கு தற்போது வரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தாமதமான மழையால் விதைப்பு பணிகள் துவங்கினால் குறிப்பிட்ட காலத்தில் விளைச்சல் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படும். இதனால் இந்த ஆண்டு மானாவாரி விவசாயத்தில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை