உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விதையில்லா திராட்சை விலை குறைவால் விவசாயிகள் கவலை

விதையில்லா திராட்சை விலை குறைவால் விவசாயிகள் கவலை

சின்னமனூர்: ஓடைப்பட்டி விதையில்லா திராட்டை விலை குறைவால் சாகுபடியாளர்கள் கவலையில் உள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. கம்பம் பகுதி கிராமங்களில் பன்னீர் திராட்சையும், ஓடைப்பட்டி வட்டாரத்தில் விதையில்லா திராட்சையும் சாகுபடி செய்யப்படுகிறது. மஹாராஷ்டிராவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இறுதியில் துவங்கி மார்ச் வரை விதையில்லா திராட்சை தமிழக மார்க்கெட்டை ஆக்கிரமித்துக் கொள்ளும். இந்த காலகட்டத்தில் தேனி திராட்சைக்கு விலை கிடைக்காது.ஆனால் இந்த சீசனில் மஹாராஷ்டிராவிலும் மழை காரணமாக விதையில்லா திராட்சை தரம் குறைந்தும், வரத்தும் குறைந்தது. ஆனால் மார்ச்சில் வரத்து நின்று விடும். ஆனால் இப்போது ஏப்ரல் 3 வது வாரமாகியும் மஹாராஷ்டிராவில் இருந்து பழம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஓடைப்பட்டி வட்டாரத்தில் சாகுபடியாகும் சரத் சீட்லெஸ் ( கருப்பு ) கிலோ ரூ.90 க்கு விலை போகிறது. கடந்த சீசனில் ரூ.150 வரை விலை கிடைத்தது.இது தொடர்பாக முன்னோடி திராட்சை விவசாயி ஓடைப்பட்டி கலாநிதி கூறுகையில், மஹாராஷ்டிராவில் இருந்து சீட்லெஸ் இன்னமும் வந்து கொண்டிருக்கிறது. எனவே ஓடைப்பட்டி சீட்லெஸ் விலை ரூ.90 போகிறது. மே முதல் ஜூலை வரை உள்ள சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். கடந்த 3 மாதங்களாக அனைத்து காய்கறிகளும் விலை குறைந்து விவசாயிகளை பாதித்து விட்டது. தக்காளி, சுரைக்காய் போன்றவற்றை நான் பறிக்காமல் தோட்டத்திலேயே உழவு செய்து விட்டேன். காரணம் கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. தமிழக அரசு இந்த பிரச்னைக்கு தீர்வு காண முன்வர வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை