பள்ளி ஆசிரியை கொலை மாமனார் போலீசில் சரண்
தேனி:தேனி அருகே குடும்பத்தகராறில் தனியார் பள்ளி ஆசிரியையை கொலை செய்த மாமனார் போலீசில் சரணடைந்தார். தேனி குச்சனுார் சதீஷ் 37. மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரது மனைவி ராஜபிரியா 38. தனியார் பள்ளி ஆசிரியை. மகன், மகள் உள்ளனர். இவர்கள் தேனி ஆர்.எம்.டி.சி., நகரில் வசித்து வந்தனர். ராஜபிரியா அலைபேசி அதிகம் பயன்படுத்தியதால் கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் சதீஷ், தந்தை துரைசிங்கம் குடும்பத்தினர், ராஜபிரியா உறவினர்கள் குடும்பத் தகராறு தொடர்பாக பேசினர். பின் சதீஷ் குழந்தைகளுடன் குச்சனுார் சென்ற நிலையில் ராஜபிரியா உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று குழந்தைகளுடன் சதீஷ் வெளியூர் சென்றார். இந்நிலையில் நேற்று மாலை உறவினர் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு ராஜ பிரியா வந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த மாமனார் துரைசிங்கம் 63, ராஜபிரியாவை கத்தியால் குத்திக் கொலை செய் தார். பின்னர் அவர் பழனிசெட்டிபட்டி போலீசில் சரணடைந்தார். அவரிடம் டி.எஸ்.பி., முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்தனர்.