உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலிதீன் பயன்பாடு ரூ.55ஆயிரம் அபராதம்

பாலிதீன் பயன்பாடு ரூ.55ஆயிரம் அபராதம்

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் விற்பனை, பயன்பாடு தொடர்பாக சோதனை நடந்தது. நகர்நல அலுவலர் டாக்டர் கவிப்பிரியா தலைமையில் நடந்த சோதனையில் சுகாதார அலுவலர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, கடற்கரைநாடார் தெரு, பகவதியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது. இதில் மொத்த விற்பனை கடையில் இருந்து 250 கிலோ தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாலிதீன் பயன்படுத்திய 10 கடைகளில் இருந்து 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, தலா ரூ.500 அபராதம் என மொத்தம் ரூ5ஆயிரம் வசூலிக்கப்பட்டது. சுகாதார அலுவலர்கள் ஜெயசந்திரன், கோபால் சோதனையில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !