மேலும் செய்திகள்
கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது
16-Oct-2024
தேவதானப்பட்டி: தீபாவளி பண்டிகையை கொண்டாட வைகை அணை நீர்த்தேக்க பகுதியில் குளிக்க சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கினார். தீயணைப்புத் துறையினர் அவரை தேடி வருகின்றனர்.பெரியகுளம் கீழவடகரை அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் ராஜேஷ் 25. அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் பிரகாஷ், ஜவஹர் உட்பட 5 பேர் ஒன்றிணைந்து தீபாவளி கொண்டாடினர்.பின் குளிப்பதற்காக வடுகபட்டி- காமக்காபட்டி அருகே ஒத்தவீடு வைகை அணை நீர்தேக்கப் பகுதிக்கு சென்றனர். நேற்று மாலை 4:00 மணிக்கு குளித்தனர். இதில் சிறிது துாரம் தண்ணீரில் சென்ற ராஜேஷ், நீச்சல் தெரியாமல் மூழ்கினார்.பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் 1:45 மணி நேரம் தேடியும் ராஜேஷ் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Oct-2024