உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மூன்று கிலோ கஞ்சா கடத்திய சிறுவன் உட்பட ஐவர் கைது

 மூன்று கிலோ கஞ்சா கடத்திய சிறுவன் உட்பட ஐவர் கைது

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கஞ்சா கடத்தி விற்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து பல இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே சந்தேகப்படும்படி வந்தவர்களை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில் பிடிபட்டவர்கள் ராஜதானி முத்துமணி 27, மணியக்காரன்பட்டி வீரமணி 21, தேனி ராஜேஷ் 34, அணைக்கரைபட்டியை சேர்ந்த ஹரிஷ் 21, அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இவர்கள் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தனர், யார் யாருடன் இவர்கள் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து ஐவரையும் கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை