மேலும் செய்திகள்
பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா கோலாகலம்
14-Mar-2025
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்), அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தனித்தனியாக கொடி மரம் அமைந்துள்ளது சிறப்பு. பழமையான இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பங்குனி உத்திர தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று ரிஷப கொடியேற்றப்பட்டது. முன்னதாக அர்ச்சகர்கள் கார்த்திக், தினேஷ் சிவம் ஹோமம் பூஜைகள்நடத்தினர்.பத்து நாட்கள்நடக்கும் விழாவில் தினமும் இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கும். முக்கிய திருவிழாவான தேரோட்டம் ஏப்.10ல் நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர்கள் சசிதரன், சிதம்பர சூரியவேலு, குணசேகரன், மண்டகபடிதாரர்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
14-Mar-2025