உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வனத்துறை நிர்வாகம் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதித்தது.பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வரத்து உள்ளது. கடந்த வாரம் வெள்ளப் பெருக்கினால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தண்ணீர் வரத்து சீரானதால் நேற்று முன்தினம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அருவிக்கு அக்கரையில் இருந்து இக்கரை வரைக்கும் இரு புறங்களிலும் 600 மீட்டர் துாரத்திற்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறை நிர்வாகம் மறுதேதி குறிப்பிடாமல் குளிக்க தடை விதித்துள்ளது.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை