போடி--மூணாறு ரோட்டில் மேம்பாலம் பணி: பஸ் போக்குவரத்தில் மாற்றம்
போடி: போடி புதூர் பாலத்தில் இருந்து மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் (ஏப்.,23,24)ல் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.45 கோடி செலவில் போடி புதூர் பாலத்தில் இருந்து ஒரு கி.மீ., தூரம் வரை 100 அடி அகலமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக இந்த ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 16 இடங்களில் பாலம், தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேம்பாலம் அமைக்கும் இடம் தவிர அருகே உள்ள ரோடுக்கான பாதையில் பஸ், கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் போடி புதூர் அருகே நடத்து வரும் மேம்பாலத்தில் பெரிய அளவிலான இயந்திரம் கொண்டு தடுப்புகள் பொருத்தும் பணி நேற்றும், இன்றும் 2 நாட்கள் நடக்கிறது. இதனால் போடி புதூர் மெயின் ரோடு வழியாக மூணாறு செல்லும் பஸ், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது.மாற்றுப் பாதையாக கட்டபொம்மன் சிலையில் இருந்து டி.வி.கே.கே., நகர் உழவர் சந்தை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு பாலம் வழியாக பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நாளை முதல் வழக்கம் போல் புதூர் வழியாக பஸ் போக்குவரத்து துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.