உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேகமலையில் மதியம் வரை பனிமூட்டம்; டூவீலர் பயணத்தை தடுக்க வலியுறுத்தல்

மேகமலையில் மதியம் வரை பனிமூட்டம்; டூவீலர் பயணத்தை தடுக்க வலியுறுத்தல்

கம்பம்; மேகமலை பகுதியில் மதியம் 12 மணிவரை பனி மூட்டம் நிலவுவதால் டூவீலர் பயணங்களை தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மேகமலையில் மூணாறுக்கு நிகராக சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பசுமையான தேயிலை தோட்டங்களும், ஹைவேவிசில் துவங்கி மணலாறு வரை ரோட்டை ஒட்டியே நீண்டு செல்லும் நீர் தேக்கமும், மலைமுகடுகளை தொட்டு செல்லும் மேக கூட்டங்களும், தண்ணீர் அருந்த அணைக்கு வரும் யானைகள், காட்டு மாடுகள் கூட்டமும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும்.ஒரு மாதத்திற்கு மேலாக சாரல் பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக சாரல் மழையும், பனி மூட்டமும் அதிகம் உள்ளது. பனி மூட்டம் இரவு மட்டுமின்றி மதியம் 12 மணி வரை தொடர்கிறது. இதனால் ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. இதையும் கண்டு கொள்ளாமல் இளைஞர்கள் டூவீலர்களில் மலை ரோட்டில் அதிவேகத்தில் செல்கின்றனர். ரோட்டில் காட்டு மாடுகள், மான்கள் நிற்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளன.எனவே வனத்துறையினர் மேகமலை பகுதிக்கு டூவீலர் பயணத்தை தடை செய்ய வேண்டும். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து இரவங்கலாறு, வெண்ணியாறு , மகாராசா மெட்டு, தூவானம் பகுதிகள் வெறிச்சோடி கிடக்கிறது. இங்குள்ள அணைகளில் சேகரமாகும் தண்ணீரை பயன்படுத்தி தேவைக்கேற்ப காலை, மாலை நேரங்களில் சுருளியாறு மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை