உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேகமலை புலிகள் காப்பக பகுதியில் ட்ரோன் வழங்க வனத்துறை ஏற்பாடு

மேகமலை புலிகள் காப்பக பகுதியில் ட்ரோன் வழங்க வனத்துறை ஏற்பாடு

கம்பம்:மேகமலை புலிகள் காப்பக பகுதிகளில் வனக் குற்றங்களை தடுக்கவும், வன உயிரின நடமாட்டம், வன பரப்பு, மரங்களின் அடர்த்தி, பரவும் நோய் ஆகியவற்றை கண்காணிக்கவும் வனப் பணியாளர்களுக்கு 'ட்ரோன்' வழங்க புலிகள் காப்பக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அனைத்து துறைகளிலும் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மேம்பாட்டிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் வனத்துறையில் ட்ரோன் பயன்பாட்டை அமல்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வன உயிரின வேட்டையை தடுத்தல், குற்றவாளிகளை அடையாளம் காணுதல்,வனப்பரப்பை மதிப்பீடு செய்தல், புதிய நோய்கள் பரவுவதை கண்டு பிடித்தல், தாவரங்களில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பனவற்றை தெரிந்து கொள்ளவும், பிற பல்வேறு பயன்பாடுகளுக்காகவும் சமீபத்தில் கம்பத்தில் 'ட்ரோன்' பயிற்சி வனத்துறையினருக்கு வழங்கப்பட்டது.கம்பம் கிழக்கு சரக வனப்பகுதிகளில் 'ட்ரோன்' தொழில்நுட்பர்கள், வனப் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தனர். வனப் பணியாளர்கள் 'ட்ரோன்' இயக்குவது பற்றி பயிற்சி பெற்றனர். பயிற்சி வழங்கி ஓராண்டை கடந்தும் ட்ரோன் வழங்கவில்லை.தற்போது புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு 'ட்ரோன்' வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் காப்பக அதிகாரிகள் கண்காணிப்பு பணியை எளிதாக மேற்கொள்ள முடியும்.புலிகள் காப்பக பகுதியில் இனி வனக் குற்றங்கள் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று காப்பக அதிகாரிகள் நம்பிக்கை தெரி விக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி