மேலும் செய்திகள்
தமிழக கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
08-Jan-2025
பெரியகுளம்; பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது 74 வது பிறந்த நாளை கொண்டாடினார்.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்தினர்.பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரதராஜப் பெருமாள் கோயில், கம்பம் ரோடு காளியம்மன், பாலசுப்பிரமணியர் கோயில்கள் சுவாமி தரிசனம் செய்தார். பெரியகுளத்தில் நடந்த விழாவில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமை வகித்தார். வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆறடி அளவுள்ள 'வெள்ளிவேல்' வழங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் மனோஜ் பாண்டியன், அய்யப்பன், புதுச்சேரி மாநிலச் செயலாளர் சேகர், அமைப்புச் செயலாளர் மஞ்சுளா, விவசாய அணி துணைச் செயலாளர் ரெங்கராஜ், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பசும்பொன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நடேசன், மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, ஆண்டி, நிர்வாகிகள் அரண்மனை சுப்பு, அபுதாஹிர், ராஜகோபால், ஜெயப்பிரகாஷ், சிவக்குமார், முருகானந்தம், முகமது அலி ஜின்னா, அன்பு, முருகன், சந்தோஷம், காமராஜ், பன்னீர்செல்வம் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு, விருந்து வழங்கப்பட்டது.-
08-Jan-2025