மேலும் செய்திகள்
பட்ஜெட் குறித்து முதல்வர் ஆலோசனை
08-Feb-2025
தேனி : தேனியில் நடக்க உள்ள பொதுக்கூட்டம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.,வினர் ஆலோசனை நடத்தினர்.பெரியகுளம் சட்டசபை தொகுதியில் மார்ச் 1ல் நடக்க உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ள இடம், கட்சியினரை அழைத்து வருவது, கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. மாவட்டச் செயலாளர்கள் ராமர், ஜக்கையன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அன்னபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து பெரியகுளம் ரோட்டில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை கட்சியினருடன் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்.
08-Feb-2025