உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பக்கரையில் தொடர் வெள்ளம் பயணிகள் குளிக்க தடை

கும்பக்கரையில் தொடர் வெள்ளம் பயணிகள் குளிக்க தடை

பெரியகுளம்: கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் 5 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை விதித்த தடை தொடர்கிறது. இந்நிலையில் தண்ணீரின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் கீழ் பகுதியில் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் என, வனத்துறை எச்சரித்துள்ளது.பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியான வட்டக்கானல், பாம்பார்புறம், வெள்ளகெவி பகுதியில் பெய்து வரும் மழை, கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. அக்.12 முதல் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று (அக்.16) 5ம் நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நுழைவு கேட் பூட்டப்பட்டது. அந்தப் பகுதியில் அலைபேசி டவர் சரிவர கிடைப்பதில்லை. தற்போது சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்களிடம் நிலைமையை எடுத்துக்கூறி வனத்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர்.கண்காணிப்பு: அருவி மேற்பகுதியில் வழுக்குப்பாறை உள்ளது. தோட்டங்கள் வழியாக சிலர் கும்பக்கரை நீரோடை கரையோரப் பகுதியில் அத்துமீறி குளிப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இந்தப் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளனர். மேலும் அருவியின் கீழ் பகுதியில் கும்பக்கரை ஆற்றுப் பகுதியில் தண்ணீர் வேகமாக செல்கிறது. இதனால் ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை