உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

பெரியகுளம் : பெரியகுளத்தில் 25 விநாயகர் சிலைகளுடன் நடந்த ஊர்வலத்தில் வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர். பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பூஜையுடன் துவங்கியது. நகரம், ஒன்றியம் பகுதிகளில் பிரதிஷ்டை செய்த 25 விநாயகர் சிலைகள் ஒன்றிணைந்து அரசு போக்குவரத்து டெப்போ அருகே ஊர்வலம் துவங்கியது. கவுன்சிலர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். ஹிந்து முன்னணி மாவட்டச் செயலாளர் உமையராஜன் தலைமை வகித்தார். வடகரை, தென்கரை முக்கிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் படித்துறை அருகே வராகநதியில் கரைக்கப்பட்டன. ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் வெங்கடேசன், கோபிக்கண்ணன், சுவாமிநாதன் உட்பட ஹிந்து முன்னணி, பா.ஜ., வினர் செய்திருந்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ