விநாயகர் சிலை ஊர்வலம்
சின்னமனூர்: சின்னமனுாரில் ஹிந்து முன்னணி, ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் தெருக்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகள் முல்லைப் பெரியாற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. ஹிந்து முன்னணி சார்பில் 60 சிலைகளும், ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் 105 சிலைகளும் ஊர்வலமாக சென்றன. ஹிந்து முன்னணி சார்பில் பா.ஜ. மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார் . ஊர்வலம் முத்தாலம்மன் கோயில், கண்ணாடி கடை முக்கு, நடுத்தெரு , வடக்கு ரத வீதி வழியாக முல்லைப் பெரியாறு சென்று, அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் ஊர்வலத்தை நிறுவன தலைவர் ரவி, ராமமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.