உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது

 ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது

தேனி: பழனிச்செட்டிபட்டி எஸ்.ஐ., அருண்பாண்டி தலைமையிலான போலீசார் திண்டுக்கல் - - குமுளி பைபாஸ் ரோடு போடி விலக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கம்பம் கோம்பை ரோடு உத்தமபுரம் முருகன் 45, இரண்டு அலைபேசிகளுடன் ரூ.3.6 லட்சம் மதிபபுள்ள 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சா, அலைபேசிகளை கைப்பற்றி விசாரித்தனர். கைதானவர் மீது ஏற்கனவே தேனி, கம்பம், அல்லிநகரம், கோவை, வேலுார் காட்பாடி, காஞ்சிபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா விற்ற வழக்குகள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை