உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொட்டக்குடி ஆற்றில் குப்பை கொட்டும் பூதிப்புரம் பேரூராட்சி மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகம் அருகே அவலம்

கொட்டக்குடி ஆற்றில் குப்பை கொட்டும் பூதிப்புரம் பேரூராட்சி மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகம் அருகே அவலம்

தேனி: பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை பேரூராட்சி நிர்வாகம் கொட்டக்குடி ஆற்றில் கொட்டி மாசுபடுத்தி வருகிறது.போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொட்டக்குடி ஆறு உருவாகிறது. இந்த ஆறு கொட்டக்குடி கிராமம், போடி, பூதிப்புரம், தேனி வழியாக அரண்மனைப்புதுார் அருகே முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது. மஞ்சிநாயக்கன்பட்டி, பூதிப்புரம்,ஆதிப்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட சில கிராமங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த ஆறு உள்ளது. ஆனால் இந்த ஆற்றில் பூதிப்புரம் பேரூராட்சி பொதுமக்களிடமிருந்து பெறும் குப்பையை நேரடியாக கொட்டுகிறது. சிலர் இறைச்சி கழிவுகளையும் ஆற்றில் கொட்டு கின்றனர். ஆற்றில் அதிக தண்ணீர் வரும் நேரங்களில் இவை அடித்து செல்லவது வாடிக்கையாக உள்ளது.இதனால் ஆற்று நீர் மாசுபடுவதுடன், அதனை பயன்படுத்தும் பொதுமக்கள், கால்நடைகளும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. பூதிப்புரம் அருகே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இருந்தாலும், அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதில்லை. நீர்நிலைகளை மாசுபடுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை