உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கலெக்டர் ஆபீசில் ராட்சத பலுான்

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கலெக்டர் ஆபீசில் ராட்சத பலுான்

தேனி : முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 25 ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரியில் கடலில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி, திறக்கப்பட்டது. இச்சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை தமிழக அரசு மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாட உள்ளது. இந்நிலையில் மாவட்டந்தோறும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கலெக்டர் ஷஜீவனா வழிகாட்டுதலில் 'வள்ளுவர் போற்றுதும் வெள்ளிவிழா 25'என்ற தலைப்பிலான ராட்சத பலுான் தேனி கலெக்டர் அலுவலக மேல்மாடியில் பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்வில் செய்தி தொடர்பு அலுவலர் நல்லதம்பி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன், துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி