உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு அலுவலர் ஒன்றியம் மாநில செயற்குழு கூட்டம்

அரசு அலுவலர் ஒன்றியம் மாநில செயற்குழு கூட்டம்

தேனி : தேனியில் அரசு அலுவலர் ஒன்றியம் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர்கள் சரவணகுமரன், துரைப்பாண்டி, சங்கர், சிவக்குமார், மாரிமுத்து தலைமை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மாநில தலைவர் அமிர்தகுமாரை பதவி நீக்கம் செய்தும், பொதுச்செயலாளர் தண்டபாணியை புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். சென்னையில் பிப்.,15ல் நடக்க உள்ள உண்ணாவிரத போராட்டம், பிப்.,26ல் துவங்க உள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் சுசீந்திரன், சந்திரசேகரன், ஆலிஸ்ஷீலா, தலைமை செயலாளர் மகேந்திரகுமார், அமைப்பு செயலாளர் பாலாஜி, மகளிரணி செயலாளர் பத்மினி, தேனி மாவட்ட தலைவர் குபேந்திரசெல்வம், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி