அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்க கூட்டம்
தேனி: அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாகர்கோவில் மண்டலம் சார்பாக (செப்.,13) நடந்த இக்கூட்டத்தில், 5 மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மே 2024 முதல் ஆகஸ்ட் 2025 ம் மாதம் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு பணப்பலன்களை வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அரசு வழங்க வேண்டும் ; பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்குவது போல ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்வினை வழங்க வேண்டும்ஓய்வூதியர்களுக்கு பணப் பிடித்தம் இல்லாத மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கு அரசு கருவூலம் மூலம் பென்ஷன் வழங்க வேண்டும் 2003 ஏப்ரல் மாதத்திற்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பாண்டி, மணிகண்ட ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்