உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழைக்கு பின் உயரும் திராட்சை விலை: விவசாயிகள் நிம்மதி

மழைக்கு பின் உயரும் திராட்சை விலை: விவசாயிகள் நிம்மதி

கம்பம்: கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த திராட்சை பழங்கள் வெடித்து உதிர்ந்த நிலையில், தற்போது மழை நின்றதால் விலை உயரத் துவங்கி உள்ளது.மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக பெய்த பலத்த மழை தற்போது சில நாட்களாக முழுவதும் நின்றுள்ளது. பெய்த கன மழையால் கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடியான திராட்சை தோட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குள்ளப்பக் கவுண்டன்பட்டி கருநாக்கமுத்தன்பட்டி, ஒடைப்பட்டி வட்டாரங்களில் உள்ள கிராமங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த திராட்சை பழங்கள் மழை காரணமாக வெடித்து உதிர்ந்தன. மேலும் திராட்சைக் கொடிகளில் இருந்த பிஞ்சு, பூக்களில் பனி மூட்டம் காரணமாக பூஞ்சான நோயான செவட்டை தாக்கி, கருகலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மழை நின்றதால், நோய் பரவலை தடுக்க பூச்சி மருந்துகள் தெளிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் திராட்சை விலை உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.25 என விற்பனையான விலை தற்போது கிலோ ரூ.35 என, உயர்ந்துள்ளது.இதுகுறித்து சுருளிப்பட்டி திராட்சை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் முகுந்தன் கூறுகையில், 'தொடர் மழை, பனி மூட்டத்துடன் கூடிய மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பழங்களில் தண்ணீர் ஏறி, வெடித்து உதிர்ந்து விட்டன. மேலும் பனிமூட்டம் காரணமாக பிஞ்சு, பூக்களில் செவட்டை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை நின்று விட்டதால், பூச்சி மருந்து தெளிக்க ஆரம்பித்துள்ளனர். திராட்சை விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இது விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் விஷயமாகும்.', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை