உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாயமான அலைபேசி உரியவரிடம் ஒப்படைப்பு

மாயமான அலைபேசி உரியவரிடம் ஒப்படைப்பு

பெரியகுளம்: பெரியகுளம் பஜார் வீதியில் பெண் தொலைத்த அலைபேசியை, கோயில் பூஜாரி கண்டெடுத்து ஸ்டேஷன் மூலம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பூஜாரியை போலீசார் பாராட்டினர்.பெரியகுளம் கீழ வடகரை ஸ்டேட் பாங்க் காலனி சீனிவாசன். இவரது மனைவி பரிமளா 22. நேற்று மாலை 5:30 மணிக்கு தென்கரை பஜார் வீதியில் பொருட்களை வாங்கி விட்டு வீட்டுக்குச் சென்றார். பையில் வைத்திருந்த ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு அலைபேசியை தொலைத்தார். பஜார் வீதியில் தேடியும் கிடைக்க வில்லை. இந்நிலையில் பெரியகுளம் அருகே தாமரரைக்குளத்தைச் சேர்ந்த கோயில் பூஜாரி பாண்டி 44. பஜார் வீதியில் கீழே கிடந்த அலைபேசியை தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ., திருப்பதிராஜாவிடம் ஒப்படைத்தார். சிறிது நேரத்தில் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய பரிமளா, அலைபேசி அடையாளங்களை தெரிவித்து அலைபேசியை போலீஸ் ஸ்டேஷனில் பெற்றுக் கொண்டார். காணாமல் போன அலைபேசி அரை மணி நேரத்தில் கிடைத்தது. பாண்டி பூஜாரி நேர்மையை போலீசார், பரிமளா பாராட்டினர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ