| ADDED : ஜன 18, 2024 06:09 AM
கம்பம் : கம்பம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு சமூக விரோத கும்பல் இரவில் தொல்லை கொடுத்து வருகின்றனர்.கம்பம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும்,கேரளாவில் குமுளி, நெடுங்கண்டம், கட்டப்பனை உள்ளிட்ட ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இரவில் பஸ்சை தவற விட்டவர்கள் பஸ் ஸ்டாண்டில் தங்கி, அதிகாலையில் முதல் பஸ்சில் ஊருக்கு செல்வார்கள். அவ்வாறு கம்பம் பஸ் ஸ்டாண்டில் தங்குபவர்களிடம் உடைமைகளை திருடுவது, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஒரு கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாதிப்படைந்தவர்கள் புகார் கொடுக்க முன்வராமல் சென்று விடுகின்றனர்.முன்பு இரவில் பஸ் ஸ்டாண்டிற்குள் போலீசார் ரோந்து வருவார்கள். இப்போது வருவது இல்லை. பஸ் ஸ்டாண்டில் அவுட்போஸ்ட் ஒன்று இருந்தது அதுவும் காலி செய்யப்பட்டு விட்டது. இதனால் சமூக விரோத கும்பலின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. கம்பம் பஸ் ஸ்டாண்டில் போலீசார் ஒருவரை இரவு பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோத கும்பலின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்.