உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடரும் சாரல் மழை

 மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடரும் சாரல் மழை

தேனி: மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்வது தொடர்கிறது. நேற்று முன்தினம் 110.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பகலில் வெயில் தாக்கமும், இரவில் பனியும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இதமான சூழல் காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஆண்டிபட்டி 2.8 மி.மீ., அரண்மனைப்புதுார் 2.22 மி.மீ., வீரபாண்டி 3.2 மி.மீ., பெரியகுளம் 9.6 மி.மீ., மஞ்சளாறு 8 மி.மீ., சோத்துப்பாறை 10.6 மி.மீ., வைகை அணை 2 மி.மீ., போடி 5.8 மி.மீ., உத்தமபாளையம் 8.6 மி.மீ., கூடலுார் 6.8 மி.மீ., பெரியாறு அணை 17 மி.மீ., தேக்கடி 26.4 மி.மீ., சண்முகாநதி அணையில் 7.4 மி.மீ., என மொத்தம் 110.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை