உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருநங்கைகளுக்கு உயர்கல்வி நிதியுதவி

திருநங்கைகளுக்கு உயர்கல்வி நிதியுதவி

தேனி : தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சார்பில், திருநங்கைகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட அலுவலர் சியாமளாதேவி தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 25 திருநங்கைகள் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாகவும் வழங்கினர். மாவட்ட அலுவலர் கூறியதாவது: உயர்கல்வியில் சேரும் அனைத்து திருநங்கை, திருநம்பிகளுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், அனைத்து கல்வி சார்ந்த கட்டணங்களும் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படுகிறது.திருநங்கைகள் திறன் பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம் திறன்களை மேம்படுத்தி சுய தொழில்புரிய 50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் திருநங்கைகள் ஒருங்கிணைந்து சுய உதவி குழுக்கள் ஆரம்பித்து தொழில் கடன் பெற்று, வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை