ஹிந்து மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்
தேனி தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் ஹிந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. தொண்டரணி மாநில துணைத் தலைவர் குரு ஐயப்பன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கட்சியினர் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்றார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 'முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 உயர்த்த வேண்டும். பெரியகுளம், போடியில் மாம்பழ கூல் தொழிற்சாலை அமைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.