உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீட்டுத்தோட்ட பராமரிப்பு ஆரோக்கியத்திற்கு அவசியம் போடி தம்பதியின் வித்தியாச விழிப்புணர்வு

வீட்டுத்தோட்ட பராமரிப்பு ஆரோக்கியத்திற்கு அவசியம் போடி தம்பதியின் வித்தியாச விழிப்புணர்வு

போடி: க டந்த 10 ஆண்டுகளாக தமது வீட்டுத் தோட்டத்தில் 300 வகையான மரங்கள், செடிகளை வளர்ப்பதுடன், தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி, மீன் இறைச்சியில் கிடைக்கும் கழிவுகளை வீணாக்காமல் மண் புழுக்களுடன் மக்க வைத்து கருவாட்டு துாசி, வேப்பம் புண்ணாக்கு கலந்து இயற்கை உரம் தயாரிக்கின்றனர். அதனை தனது வீட்டுத்தோட்டத்தில் உள்ள மூங்கில் மரங்கள், பூத்துக் குலுங்கும் பூச்செடிகள், கீரைகள், காய்கறி, மூலிகைச் செடிகள் என, 300 வகையான மரங்கள், செடிகளுக்கு பசுமை உரமாக இட்டு பசுமையான வளர்த்து, வீட்டிற்கு வரும் நபர்களிடம் நீடித்த நிலையான ஆரோக்கியம் பெற வீட்டுத்தோட்டம் அமைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் போடி சுப்புராஜ் நகரில் வசிக்கும் வேதா - ரூபி ஷோபா தம்பதியினர். இத்தம்பதியின் வீட்டுத்தோட்டத்தில் நறுமணம் கமலும் மல்லி, இட்லி பூக்கள், மூலிகைச் செடிகள், மாதுளை, வாழை மரங்கள் வளர்த்துள்ளன. பூச்செடிகள் அதிகம் வளர்க்கப்பட்டுள்ளதால் ராபின் ரெட் பிரஸ், தேன்சிட்டு, குயில், ஸ்டிச்சிங் பேர்ட் உள்ளிட்ட பறவைகளும், பழங்களை உண்ண அணில்களும் வந்து செல்கின்றன. இந்த வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகளில் முருங்கை, பச்சை மிளகாய், சேமக் கிழங்கு, கீரைகளில் மிளகு தக்காளி, முருங்கை, மணத்தக்காளி, புதினா, பொன்னாங்கண்ணி, மாதுளை, கல்வாழை, குரோட்டன்ஸ், கற்றாழை, மணி பிளான்ட், பாட்டில் பிரஸ் மட்டும் இன்றி வீட்டின் வளாகம், உள்பகுதியில் சிறிய அளவிலான தொட்டி, வண்ண மயமான பாட்டில்களில் அழகு செடிகள் வளர்த்து வீட்டிற்கு மேலும் இத்தம்பதி அழகு சேர்த்துள்ளனர். மனதிற்கு மகிழ்ச்சி ஜெ.வேதா, தாளாளர், சிசம் பள்ளிக் குழுமம், போடி: வீட்டை சுற்றி ஆக்சிஜன் தரும் மூங்கில், வேம்பு, ஆந்துாரியம், குரோட்டன், தாமரை, ரோஜா, இட்லி பூ, ரங்கூன் கிரிப்பர், பிரம்ம கமலம், பாக்ஸ் டைல்ஸ் பார்ம்ஸ், கள்ளிச் செடிகள், தண்டர் லில்லி, மினி ஆலமரம், மணி பிளான்ட், முருங்கை, வெற்றிலைக் கொடி, புதினா, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, மிளகாய், மாதுளை உட்பட வளாகப் பகுதியில் 200 மரங்கள், செடிகளையும், வீட்டில் உள் பகுதியில் 100 செடிகளை 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு வளர்த்து வருகின்றோம். தினமும் காலை, மாலை நேரங்களில் வீட்டின் வளாக பகுதியை சுற்றி நடை பயிற்சி செல்வோம். தொடர்ந்து செடிகளை பராமரித்து வருகின்றோம். கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜனால் உடல் ஆரோக்கியம் ஏற்படுகிறது. மனமும் மகிழ்ச்சியாக இருப்பதை தினமும் எங்களால் உணர முடிகிறது. இந்த மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்களில் உள்ள தேனை குடிப்பதற்காக பறவைகள் வந்து செல்வது மனதை ஆற்றுப்படுத்துகிறது., என்றார். நீடித்த நிலையான ஆரோக்கியம் பி.ரூபி ஷோபா, சிசம் கல்வி குழுமம், நிர்வாக அலுவலர், போடி : தோட்டத்தில் அழகு தரும் வகையில் பிரம்ம கமலம், மான்ஸ்டரா, ஷிங்கில் பிளாண்ட், லைலர் மஞ்சு, சில்வர் யுகா, ராபிஸ்பாம், நோலினா, பிலோ டென்ட்ரான், ஸ்பைடர் லில்லி, பைகஸ் பாண்டா, அலோ மென்டா உட்பட 100 செடிகளை சிறிய அளவிலான தொட்டி, கலர் கலரான பாட்டில்கள், வண்ண மயமான தொட்டிகளில் வளர்த்து வருகிறோம். வீட்டோடு 'ப்ளே ஸ்கூல்' அமைத்து உள்ளோம். தோட்டத்தை இயற்கை முறையில் பராமரித்து வருகின்றோம். மீன், காய்கறி கழிவுகள், செடிகளில் உதிர்ந்த இலைகள், கருவாடு துாசியுடன் மக்க வைப்பதன் மூலம் இயற்கை உரம் கிடைக்கிறது. இதோடு வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தி வருகின்றோம். வெளியே எவ்வித உரமும் வாங்குவது இல்லை. இதனால் செடிகளை தாக்கும் பூச்சிகளை விரட்டி செடிகள் வளர உதவுகின்றன. தோட்டத்தை பராமரிப்பதால் குடும்பத்தினரின் நீடித்த நிலையான ஆரோக்கியத்திற்கு தோட்ட பராமரிப்பே முக்கிய காரணம். இதனால் ஆலோசனை கேட்கும் அனைவரிடம் வீட்டுத்தோட்டம் அமைத்து பராமரிப்பதற்கான 'டிப்ஸ்' வழங்கி வருகிறோம்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ