உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தினமும் காய்கறிகள் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தோட்டக்கலை கல்லுாரி முதல்வர் பேச்சு

தினமும் காய்கறிகள் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தோட்டக்கலை கல்லுாரி முதல்வர் பேச்சு

பெரியகுளம், : ஒவ்வொரு மனிதனும் தினமும் 280 முதல் 320 கிராம் காய்கறிகளை உணவாக சாப்பிடும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தெரிவித்தார்.பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி,ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும் அங்கக வேளாண்மையின் வயல் விழா முதல்வர் ராஜாங்கம் தலைமையில் நடந்தது.தக்காளியில் விவசாய உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றி முதல்வர் பேசியதாவது: மனித நல் வாழ்வுக்கு இயற்கை வேளாண்மை முக்கியத்துவம் இன்றியமையாது. ஒரு மனிதன் தினமும் 280 முதல் 320 கிராம் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை உணவாக சாப்பிடும் போது, உடலில் அனைத்து வகையான ஊட்டச்சத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமும் கிடைக்கிறது. வியாபார ரீதியில் சாகுபடி முறைகளை கடைபிடிப்பதன் மூலம் அதிக மகசூல் செய்து பயன்பெறலாம் என்றார்.வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம், தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆறுமுகம் பேசினர். தமிழகத்திலிருந்து 100 காய்கறி முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் மற்றும் காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.திட்ட ஆராய்ச்சியாளர்கள் ஸ்ரீமதிபிரியா, ராஜேஷ், நாகேஸ்வரி, காய்கறி பயிர்கள் துறை தலைவர் சுகன்யா கன்னா, பேராசிரியர்கள் ராஜமாணிக்கம் கல்பனாபங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை