உண்ணாவிரத போராட்டம்
தேனி: அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 2.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக கூறிய தி.மு.க.,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தேனி பங்களாமேட்டில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் போரட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி தாளாளர் சங்க தலைவர் லட்சுமிவாசன், அமைப்பு செயலாளர் வேணுகோபால், அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மாநில செயலாளர் செல்வம், சவரி முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.