உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேலை வாங்கி தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: கணவன், மனைவி மீது வழக்கு

வேலை வாங்கி தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: கணவன், மனைவி மீது வழக்கு

போடி:தேனி மாவட்டம், போடி அருகே வினோபாஜி காலனியை சேர்ந்தவர் பாண்டியராஜ் 44. இவர் தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா 39. இவர்கள் இருவரும் இதே பகுதியை சேர்ந்த கவுதம் கிருஷ்ணா 29 என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறி 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 6 லட்சம் வாங்கி உள்ளனர். வேலைக்கான பணி நியமன ஆணையை கொடுத்துள்ளனர். அந்த ஆணை போலியானது என கவுதம் கிருஷ்ணாவிற்கு தெரிய வந்தது. இதனால் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இருவரும் பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர்.கவுதம் கிருஷ்ணா புகாரில் போடி தாலுகா போலீசார் பாண்டியராஜ், தீபா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை