மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை
தேவதானப்பட்டி : ஆண்டிபட்டி தாலுகா டி.பொம்மிநாயக்கன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் 62. இவரது மனைவி இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான தங்கவேல். ஜெயமங்கலம் அருகே மருகால்பட்டியில் தங்கை வீட்டில் இருந்தார். இந்நிலையில் விஷம் குடித்து மருகால்பட்டி பஸ்ஸ்டாப்பில் மயங்கி கிடந்தார். மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தங்கவேல் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.