உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி குமராபுரத்தைச் சேர்ந்தவர் கவுதம் 23. இதே பகுதியைச் சேர்ந்தவர் தங்க பாண்டியம்மாள் 19, இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் 8 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது தங்க பாண்டியம்மாள் 4 மாத கர்ப்பமாக உள்ளார். கவுதம் ஆண்டிபட்டியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார். இரு நாட்களுக்கு முன் கவுதம் அவரது தம்பி கௌசிக் என்பவருடன் இருசக்கர வாகனம் வாங்க செல்வதாக கூறி சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. தங்க பாண்டியம்மாள் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை