உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவி கண்முன் கணவர் குழந்தை விபத்தில் பலி

மனைவி கண்முன் கணவர் குழந்தை விபத்தில் பலி

வருஷநாடு: தேனி மாவட்டம், வருஷநாடு பால்சாமி மகன் ராம்குமார், 27. இவரது மனைவி ரமணாதேவி, 25. மகன் மிதுல்ஸ்ரீராம், 2. இவர்கள், டூ - வீலரில் தேனி அரண்மனைப்புதுாரில் இருந்து வருஷநாடு நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தனர். மதியம் 2:50 மணிக்கு, வலையப்பட்டி நோக்கி சென்ற கார், எதிரே வந்த வேனிற்காக வேகத்தை குறைத்தது. இதனால், ராம்குமார் ஓட்டிச் சென்ற டூ - வீலர், வேகத்தை குறைத்த காரின் பின்புறம் மோதியது. இதில் ரோட்டின் வலதுபுறம் மூவரும் விழுந்தனர்.அப்போது வேகமாக எதிரே வந்த வேன் ராம்குமார், மிதுல்ஸ்ரீராம் மீது மோதியது. சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்தனர். ரமணாதேவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. கார், வேன் டிரைவர்களிடம் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை