மேலும் செய்திகள்
காட்டு யானை தாக்கி சீதா இறந்ததாக போலீசார் உறுதி
26-Jul-2025
மூணாறு: எட்டு வயது சிறுமி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து குற்றபிரிவு எஸ்.பி., ஹரிதாஸ் விசாரித்தார். மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான குண்டுமலை எஸ்டேட் அப்பர் டிவிடினில் எட்டு வயது சிறுமி 2019 செப்.9ல் வீட்டினுள் பிளாஸ்டிக் கயிறு கழுத்தில் இறுக்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மூணாறு போலீசார் தற்கொலை என வழக்கு பதிவு செய்தனர். கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடத்திய பிரேத பரிசோதனையில் சிறுமி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரியவந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. மூணாறு போலீசார் நடத்திய விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் தனிப்படை போலீசார் விசாரித்தனர். கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் சிறுமி போன்று டம்மி வைத்து நடத்திய பரிசோதனையின் சூழல் வைத்து சிறுமி கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. தடயங்கள், சாட்சிகள் ஆகியவை இல்லாததால் கொலை என நிரூபிக்க இயலாமல் விசாரணை கிடப்பில் போடப்பட்டது. அதனால் வழக்கு விசாரணை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்நிலையில் இடுக்கி குற்றப்பிரிவு எஸ்.பி., யாக பொறுப்பேற்ற ஹரிதாஸ் சம்பவம் நடந்த வீட்டை ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினார். சிறுமியின் இறப்பில் உள்ள மர்மத்தை கண்டறியும் வகையில் தீவிரமாக விசராணை நடத்தப்படும், என அவர் தெரிவித்தார்.
26-Jul-2025