உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சின்னமனுாரில் கொசு மருந்து தெளிப்பதில் சுணக்கம் பொது மக்கள் அவதி

சின்னமனுாரில் கொசு மருந்து தெளிப்பதில் சுணக்கம் பொது மக்கள் அவதி

சின்னமனூர்: சின்னமனுார் நகராட்சியில் கொசு மருந்து தெளிப்பதில் தொடர்ந்து மெத்தனப் போக்கு நிலவுவதால், கொசுக் கடியால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மின் நகர், அண்ணாமலை நகர், எழில் நகர், லட்சுமி நகர், கண்ணம்மா கார்டன் என விரிவாக்கப் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. நகராட்சியின் முதல் வார்டு நகராட்சியில் இருந்து 2 கி.மீ., தூரம் தள்ளி தனி தீவாக உள்ளது.சமீபகாலமாக சின்னமனுார் விரிவாக்கப் பகுதிகளில் குறிப்பாக மேலப்பூலானந்தபுரம், காந்திநகர் காலனி, பொன் நகர், வ.உ.சி., நகர் பகுதிகள் என நகரில் பரவலாக கொசு தொல்லை அதிகரித்துள்ளது. கொசு மருந்து தெளிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.நகராட்சியில் உள்ள மூன்று கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்களை பழுது நீக்க கடந்த மாதம் ரூ.75 ஆயிரத்தை நகராட்சி செலவழித்துள்ளது. பழுது நீக்கப்பட்ட நிலையில் கொசு மருந்து தெளிப்பு இயந்திரங்கள் என்ன ஆனது என்பது தெரியவில்லை. புறநகர் ஒன்றில்லாமல் பரவலாக நகர் முழுவதும் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. கமிஷனர் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ