முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1555 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு 900 கன அடியாக இருந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு திடீரென நீர் திறப்பு வினாடிக்கு 1555 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 131.45 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 375 கன அடி. நீர் இருப்பு 5036 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பு பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியது. நீர்மட்டம் மேலும் குறையும் நிலை உருவாகியுள்ளது. மின் உற்பத்தி அதிகரிப்பு
தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 81 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று கூடுதாக தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்உற்பத்தி 140 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.