உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்மாயில் மீன்கள் திருட்டு ஏலம் விட வலியுறுத்தல்

கண்மாயில் மீன்கள் திருட்டு ஏலம் விட வலியுறுத்தல்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 3 கண்மாய்களில் கடந்த இரு மாதங்களுக்கு முன் 20 ஆயிரம் மீன்குஞ்சுகள் வளர்ப்புக்காக விடப்பட்டன. டி.சில்க்வார்பட்டி ஆதிதிராவிடர் காலனி, சேடபட்டி, டி.ராஜகோபாலன்பட்டி கண்மாய்களில் விடப்பட்ட கட்லா, மிருகாள், ரோகு, ஜிலேபி, வாளை வகை மீன் குஞ்சுகள் தற்போது வளர்ந்த நிலையில் உள்ளன. கண்மாய்களில் சிலர் திருட்டுத்தனமாக மீன்களை பிடித்து செல்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கும் நோக்கத்தில் கண்மாய்களில் மீன் வளர்ப்பு திட்டம் துவக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் காவலர்களை நியமித்து கண்காணித்தாலும் மீன் திருட்டை தடுக்க முடியவில்லை. கண்மாய்களில் மீன்கள் பிடிப்புக்கான ஏலம் விட விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை