உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேக்கிழார்பட்டியில் குடிநீர் உந்து நிலையம் அமைக்க வலியுறுத்தல்

மேக்கிழார்பட்டியில் குடிநீர் உந்து நிலையம் அமைக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் அனுப்பப்பட்டி ஊராட்சி மேக்கிழார்பட்டியில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க நீர் உந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ஒன்றியத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டத்தில் மூலம் குடிநீர் வினியோகம் ஆகிறது. குன்னுார் ஆற்றில் உறை கிணறுகளில் பம்ப் செய்யப்படும் நீர் குழாய் மூலம் கொண்டுவரப்படுகிறது. குப்பாம்பட்டியில் உள்ள நீர் உந்து நிலையத்தில் இருந்து பம்ப்பிங் செய்யப்படும் நீர் அனுப்பப்பட்டி உந்து நிலையத்தில் மீண்டும் பம்ப் செய்யப்பட்டு அனுப்பப்பட்டி, ஏத்தக்கோயில், சித்தயகவுண்டன்பட்டி, மேக்கிழார்பட்டி, அம்பேத்கார் நகர், ரங்கராம்பட்டி, போடிதாசன்பட்டி கிராமங்களுக்கு அனுப்பப்படுகிறது. அனுப்பப்பட்டியில் இருந்து பம்ப் செய்யப்படும் நீர் மேடான மேக்கிழார்பட்டிக்கு குறைந்த அளவே கிடைப்பதால் பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது இப்பகுதியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் 356 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இப்பகுதிக்கும் இன்னும் சில மாதங்களில் குடிநீர் தேவைப்படும். ஏற்கனவே கிடைக்கும் நீர் போதுமானதாக இல்லை. எனவே மேக்கழார்பட்டி, அம்பேத்கார் நகர் பகுதியில் புதிய உந்து நிலையம் அமைக்க வேண்டும். குப்பாம்பட்டி விலக்கில் இருந்து இந்த உந்துநிலையத்திற்கு தனியாக தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை