உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேவதானப்பட்டி ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர் நியமனம் தினமலர் செய்தி எதிரொலி

தேவதானப்பட்டி ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர் நியமனம் தினமலர் செய்தி எதிரொலி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார். தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்டு அட்டணம்பட்டி, சில்வார்பட்டி, டி.வாடிப்பட்டி, கெங்குவார்பட்டி, டம்டம்பாறை வரை 25 கி.மீ., ஸ்டேஷன் தூரம் உள்ளது. இப்பகுதியில் ஜாதிமோதல், கோயில்திருவிழாவில் மோதல், கொலை, கொள்ளை, மணல் கடத்தல், போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து போலீசாருக்கு மிரட்டல் விடும் வகையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் ரமேஷை போலீசார் தாக்கிய விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா, எஸ்.எஸ்.ஐ., சுயம்பு மற்றும் மூன்று போலீசார் வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இங்குள்ள இன்ஸ்பெக்டர் ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனையும் கண்காணிக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் இல்லாததால் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அசாதாரண சூழல் ஏற்பட்டதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திருநெல்வேலி டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பணிமாறுதலில், நேற்று தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை