உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  நெல் பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

 நெல் பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

தேனி: பயிர் காப்பீடு பற்றிய டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலம் வேளாண் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. வேளாண் துணை இயக்குநர் மீனாகுமாரி துவக்கி வைத்தார். வேளாண் அலுவலர் விஜய் ஒருங்கிணைத்தார். அலுவலர்கள் கூறுகையில், 'பயிர்களுக்கு காப்பீடு அவசியமாகும். ரபி பருவத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் நவ., 15 ஆகும். ஏக்கருக்கு காப்பீட்டுத்தொகை ரூ. 38,038 ஆகும். இதற்கு பிரிமியம் தொகையாக ரூ. 570.57 காசு செலுத்த வேண்டும். இயற்கை பேரிடர், சேதங்களில் மகசூல் பாதித்தால் இழப்பீடு பெற இயலும். விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ