மேலும் செய்திகள்
கிட்ஸ் கிளப் மழலையர் இன்சொல் வாழ்த்துகள்
29-Nov-2024
கூடலுார்: சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு கூடலுார் மழலையர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தியானப் பயிற்சியில் ஈடுபட்டனர்.இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று டிச.21ம் தேதியை சர்வதேச தியான தினமாக அனுசரிக்க ஐ.நா., பொது சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. உடல் மற்றும் மன நலனின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேச தியான தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அனுசரிக்கும் வகையில் கூடலுார் மழலையர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் தியானப் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சகிலா, மாவட்ட யோகாசன சங்க தலைவர் ராஜேந்திரன், பயிற்சியாளர் ரவிராம் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியைகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
29-Nov-2024