மாவட்டத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் கல்வி நிறுவனங்களில் ஆர்வமாக நடந்த பயிற்சி
தேனி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடந்தன.தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் ஸ்ரீனிவாசன், இணைச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் பிரியதர்ஷினி, துணைமுதல்வர்கள் முருகன், ராம்குமார் முன்னிலை வகித்தனர். எம்.சி.கே.எஸ்., பிரானிக் ஹீலிங் யோக மையத்தை சேர்ந்த ஸ்ரீமதி, சக்திஸ்ரீ, சார்பிரியா, ஸ்வர்ணா ஆகியோர் யோகா பயிற்சி வழங்கினர். மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை சிந்துஜா ஒருங்கிணைத்தார்.கம்மவார் சங்கம் கலைக் கல்லுாரியின் உடற்கல்வித்துறை, தேனி மனவளக்கலை மன்றத்துடன் இணைந்து யோகா தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் வெற்றிவேல் தலைமை வகித்தார்.உடற்கல்வி இயக்குனர் வரவேற்றார். மனவளக்கலை மன்ற தலைவர் டாக்டர்.கண்ணன் போஜராஜ் யோகாவின் சிறப்புகளை விளக்கினார். உடற்கல்வித்துறை பேராசிரியை குருகுலஹேமா நன்றி தெரிவித்தார்.வெங்கடாசலபுரம் ஸ்ரீவரத வேங்கடரமண மேல்நிலைப்பள்ளியில் நாகலாபுரம் மதுமதி மூலிகைமற்றும் யோகா மருத்துவனை சார்பில் யோகா பயிற்சி வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் தினகரன் முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியாளர் சண்முகசுந்தரம் மாணவர்களுக்கு யோகா முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.உதவி தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்தார்.அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி முதல்வர் பரந்தாமன் தலைமை வகித்தார். யோகா பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி துணைமுதல்வர் வினோத்குமார், ஆசிரியர்கள் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தபால் துறை சார்பில் வீரபாண்டி முல்லை பெரியாற்றங்கரையில் யோக நிகழ்ச்சி நடந்தது. தபால் கோட்ட தலைமை கண்காணிப்பாளர் குமரன் தலைமை வகித்தார். தேனி அறிவுத்திருக்கோவில் யோகா பயிற்சியாளர்கள் பங்கேற்ற பயிற்சி வழங்கினர்.போடி : ஜமீன்தாரணி காமுலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன் தலைமையில் நடந்தது. செயலாளர் இனாயத் உசேன் கான் முன்னிலை வகித்தார். முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். மாணவர்களுக்கு யோகா, மூச்சு பயிற்சி செய்யும் முறைகள், பயன்கள் எடுத்து கூறினர்.உப்புக்கோட்டை பச்சையப்பா நர்சரி அண்டு பிரைமரி பள்ளியில் உயர்நிலைப் பள்ளி, துவக்கப்பள்ளியில் பள்ளி தாளாளர் லட்சுமிவாசன் தலைமையில் நடந்தது. முன்னாள் ராணுவ வீரர் பவுன், பிரம்ம குமாரி சற்குணம் ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர். உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி, துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தங்கம்மாள், பள்ளி முதல்வர் ரஞ்சித் குமார், பள்ளிக்கல்வி குழும நிர்வாக குழு உறுப்பினர் பச்சையப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., உடற்கல்வி துறை சார்பில் நடந்த யோகா தின விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. உடற்கல்வி இயக்குனர் சிவா, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மணிகண்டன் வரவேற்றனர். அறிவுத் திருக்கோயில் மன வளக்கலை மன்ற பேராசிரியர்கள் முத்துலட்சுமி, மாலதி, முருகேசன், மஞ்சுளா, சங்கரேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு யோகா, மூச்சு பயிற்சி செய்யும் முறைகள், முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினர். பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.பெரியகுளம்: வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. பொருளாளர் செல்வக்குமர பாண்டியன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சின்னராஜா வரவேற்றார். உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் விமலா, கீதா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தனர். பசுமை படை பணித்திட்ட அலுவலர் பாலமுருகன், உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகைராஜ் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியைகள் யோகா செய்தனர். உதவி தலைமையாசிரியர் கவுதம் அசோக்குமார் நன்றி கூறினார்.பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியில் யோகா தினம் பள்ளி செயலர் முத்து மாணிக்கம் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். ஆசிரியர் ரவி யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தார். மாணவ, மாணவிகள் யோகாசனங்கள் செய்தனர். பள்ளிக்குழு உறுப்பினர் தேவபிரியா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் பாண்டீஸ்வரன் நன்றி கூறினார்.ஆண்டிபட்டி: டைமன் வித்யாலயா பள்ளியில் பள்ளி தாளாளர் பாண்டிச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளி இயக்குனர் கபில், துணை இயக்குனர் ஸ்ரீ வாகினி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஹேமலதா, துணை முதல்வர் முருகேஸ்வரி வரவேற்றனர். மாணவர்களுக்கு எளிய யோகாசனங்கள், பிராணயாமா, தியானம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் தினமும் யோகா பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.