உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தந்தை, மகன் விபத்தில் பலி வேன் டிரைவரிடம் விசாரணை

தந்தை, மகன் விபத்தில் பலி வேன் டிரைவரிடம் விசாரணை

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். 55. மகன் வீரமுத்து 30. ஜன. 1 அதிகாலை டூவீலரில் பெரியகுளம் சென்று விட்டு ஜி.கல்லுப்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். டூவீலரை வீரமுத்து ஓட்டினார். டி.வாடிப்பட்டி பிரிவு அருகே வந்தபோது டூவீலர் மீது சரக்கு வேன் மோதியது. இவ்விபத்தில் தந்தை, மகன் பலியாகினர். விபத்து ஏற்படுத்திய சரக்கு வேன் டிரைவரை தேவதானப்பட்டி போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் காயத்துடன் சிகிச்சை பெறும் வடுகபட்டியைச் சேர்ந்த சிவக்குமார் 44, யிடம் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை