உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோடைகால பயிற்சியில் பங்கேற்க அழைப்பு

கோடைகால பயிற்சியில் பங்கேற்க அழைப்பு

தேனி: மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஏப்.,25 முதல் மே 15 வரை கபடி, கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, தடகளம், சிலம்பம் ஆகிய போட்டிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடக்கிறது. இப்பயிற்சியில் 18 வயதிற்குட்பட்ட இரு பாலர்கள் கட்டணமின்றி பங்கேற்கலாம். பங்கேற்பவர்களக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரையும் வழங்கப்படும். பயிற்சி தொடர்பான கூடுதல் விபரங்களை மாவட்ட விளையாட்டு அரங்கம் அல்லது 74017 03505 என்ற அலைபேசி எண்ணில் தெரிந்து கொள்ளலாம். கோடை பயிற்சி முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி