உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மல்லிகை கிலோ ரூ.4,000க்கு விற்பனை

மல்லிகை கிலோ ரூ.4,000க்கு விற்பனை

தேனி : தேனி பூ மார்க்கெட்டிற்கு தேனியை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பூக்கள் தினமும் விற்பனைக்கு வருகின்றன. நேற்று முன்தினம் மல்லிகை கிலோ 2,800 - 3,000 ரூபாய் வரை விற்பனை ஆனது. நேற்று கிலோ 4,000 ரூபாயாக உயர்ந்தது. முல்லை, 1,500, கனகாம்பரம் 1,000, சம்பங்கி 350 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வியாபாரி குமார் கூறுகையில், ''மல்லிகைப் பூ சீசனின் போது தினமும் 3 டன் வரை வரும். தற்போது அதிக பனிப்பொழிவால் வரத்து குறைந்துள்ளது. மார்க்கெட்டிற்கு 50 -- 60 கிலோ மட்டும் வரத்து உள்ளது. ''தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. பனித்தாக்கம் குறைந்து, பூக்கள் வரத்து உயரும் போது விலை குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ