உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வடிகால் இன்றி குளமாக மாறிய கருநாக்கமுத்தன்பட்டி ரோடு

வடிகால் இன்றி குளமாக மாறிய கருநாக்கமுத்தன்பட்டி ரோடு

கூடலுார்: கருநாக்கமுத்தன்பட்டி மெயின் ரோடு ஒரு கி.மீ., தூரம் கொண்டதாகும். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு கள்ளர் துவக்கப்பள்ளி, பஸ் ஸ்டாப், அவுட் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய அனைத்தும் இந்த மெயின் ரோட்டில் உள்ளது. கேரளாவில் இருந்து சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிகம் இந்த ரோட்டையை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் ரோட்டில் பல இடங்கள் குளமாக மாறியுள்ளது. இரு பகுதிகளிலும் ஊராட்சி சார்பில் முறையாக கழிவு நீரோடை வசதி செய்யவில்லை. இதனால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து ரோட்டில் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தியுள்ளது. கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி தொற்று நோயையும் ஏற்படுத்துகிறது.நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு சீரமைத்தாலும் ஊராட்சி சார்பில் கழிவுநீரோடை முறையாக அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை