உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கேரளாவின் ‛மில்மா வால் தேனி ஆவினுக்கு பாதிப்பு

 கேரளாவின் ‛மில்மா வால் தேனி ஆவினுக்கு பாதிப்பு

தேனி: கேரள அரசின் 'மில்மா' பால் நிறுவனம், ஆவினை விட லிட்டருக்கு ரூ.10 கூடுதலாக வழங்கி கொள்முதல் செய்வதால் தேனி ஆவினுக்கு பால் வழங்க கம்பம், கூடலுார் உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஆவின் அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் தினமும் 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கம்பம், கூடலுார் பகுதிகளில் இருந்து அதிக பட்சம் 1200 லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. இப் பகுதியில் இருந்து மில்மா, தனியார் நிறுவனங்கள் லிட்டர் ரூ. 43க்கு பால் கொள்முதல் செய்கின்றனர். ஆவின் லிட்டர் ரூ. 33, ஊக்க தொகை ரூ.3 வீதம் வழங்குகிறோம். விவசாயிகளை சந்தித்து ஆவினுக்கு பால் வழங்க பேசி வருகிறோம். சில தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலுக்கு முன்பே 'அட்வான்ஸ்' தொகையை உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்றன. இதனால் பலர் தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்குகின்றனர். கேரளாவின் 'மில்மா' நிறுவனம் லிட்டருக்கு கூடுதல் தொகை தருவதால் அந்த பகுதியில் கொள்முதல் செய்வது சவாலாக உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை