உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயிலில் பிப்.10ல் கும்பாபிஷேகம் சின்னமனூரில் யாகசாலைகள் தயார்

பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயிலில் பிப்.10ல் கும்பாபிஷேகம் சின்னமனூரில் யாகசாலைகள் தயார்

சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் பிப்.10ல் நடைபெறுகிறது. இதற்காக யாகசாலைகள் தயாராகி உள்ளது. வரலாற்று சிறப்பு பெற்ற இக் கோயிலில் பூலாநந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றினார் என்பது தனிச் சிறப்பாகும். இங்குள்ள மூலவர் அளவுக்கு அளவானவர் என்ற சிறப்பு பெற்றவர். மூலவரை தரிசிக்கும் போது, பக்தர் என்ன உயரத்தில் இருக்கிறாரோ அந்த உயரத்திற்கு காட்சியளிப்பார். உயரமாக இருந்தால் உயரமாகவும், உயரம் குறைவாக இருந்தால் அவர் பார்ப்பதற்கு ஏற்ற வகையிலும் காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.இக்கோயில் கும்பாபிஷேகம் 2007ல் நடைபெற்றது. அதன் பின் நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதியின்படி ஊர் முக்கிய பிரமுகர்கள் உபயதாரர்களாக இருந்து திருப்பணிகள் செய்துள்ளனர். இதனையொட்டி மகா கும்பாபிஷேகம் பிப் 10ல் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்காக கோயில் வளாகத்தில் 19 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூலாநந்தீஸ்வரர், சிவகாமியம்மன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு 3 பெரிய யாக குண்டங்களும், பரிகார தெய்வங்களுக்கு 16 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாகத்தில் பங்கேற்கின்றனர். திருப்பணி, கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணி தலைமை ஒருங்கிணைப்பாளர் துர்காவஜ்ரவேல், காயத்ரி பெண்கள் பள்ளி தாளாளர் விரியன் சாமி, செயல் அலுவலர் நதியா உள்ளிட்ட உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி